About Us
Learn more about us
Puducherry Yadhava Matrimony
Welcome to Puducherry Yadhava Matrimony. We are a leading Yadhava matrimonial matchmaking service provider in Puducherry. Our experienced team is committed to provide the best solutions to all prospective Puducherry Yadhava brides and grooms. We are technology driven providing the best engagement and interface in both website and mobile site platform to those who are genuinely looking for their life partner. We have a long list of Happy Customers, who are pleased with friendly services.

History Of Yadava Munnetra Sangam Puducherry
இடையர், சாம்பார் இடையர், பிள்ளை, தெலுங்கு மொழிபேசும் யாதவர்கள, தென் மாநிலத்தில் கோனார் என்று அழைக்கப்பட்டவர்கள் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து யாதவ் என்று அழைக்கப்படுவார்கள் என்றுமுன்னோர்கள் முடிவுசெய்தார்கள்.
புதுச்சேரியில் உள்ள யாதவர்களுக்கு என்று தனியாக ஒரு சங்கம் வேண்டும் என்று ஆன்றோர்களும் சான்றோர்களும் ஒன்றுசேர்ந்து யாதவ முன்னேற்ற சங்கம் புதுச்சேரியில் தொடங்கிணார்கள்.
முதல் தலைவராக கிருஷ்ணசாமி பிள்ளையும் செயலாளராக தியாகி.துரைமுனுசாமிப் பிள்ளை அவர்களும் S.ஆனந்தன் ஆடிட்டர் பொருளாலராகவும் புதுச்சேரியில் உள்ள யாதவ பிரமுகர்களை உறுப்பினர்களாக கொண்டு 3/10/1981 ROCயில் பதிவு செய்து சிறப்பாக தொடங்கப்பட்டது.
பின்னாளில் தியாகி.துரை முனுசாமிப் பிள்ளை அவர்கள் தலைவராக பொறுப்பேற்று 1983ஆம் ஆண்டு யாதவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இரண்டு நாள் யாதவர் மாநாடு ஆனந்தா திருமண நிலையத்தில் பிரம்மாண்டமாக அனைவரும் வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டினார்கள்.
அதன் பிறகு 31/3/1996ல்நடைபெற்ற பொதுக்குழுவில் தியாகி B. ரங்கப் பிள்ளை அவர்கள் தலைவராகவும் V.அய்யம்பெருமாள் யாதவ் அவர்கள் செயலாளராகவும் P.ரங்கநாதன் யாதவ் பொருளாலராகவும் திறம்பட நடத்தினார்கள்.
சங்கத்தின் சார்பாக நலத்திட்டங்கள் என்ன செய்யலாம் மற்றும் ஆன்மீக செயல்பாடுகள் என்ன செய்யலாம் என்று அனைவரும் ஒன்று கூடி கலந்தாலோசித்து கீழ்க்கண்ட செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தினார்கள்:
பத்தாவது பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற நமது சங்க ஆயுள் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு தொகை வழங்கினார்கள்.
நலிந்த நிலையில் உள்ள யாதவ குல பெண்களை தேர்வு செய்து தையல் மெஷின் வழங்கினார்கள்.
விளம்பரதாரர்களிடம் நிதி வசூல் செய்து காலண்டர் தயார் செய்து உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கபட்டது.
நமது குலக் கடவுளான ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு நமது யாதவ குல மக்களிடம் நிதி வசூல் செய்து தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனந்தரங்கர் ரவிச்சந்திரன் தலைமையில் கமிட்டி அமைத்து முன்னணி நிர்வாகிகள் K.செல்லப்பெருமாள் யாதவ், P.ரங்கநாதன் யாதவ், V.ஐயம்பெருமாள் யாதவ், R.சந்திரசேகரன் யாதவ், இந்திய ராணுவ வீரர்வேணுகோபால் யாதவ் மற்றும் பேராவூர் பொன் மூர்த்தி யாதவ் மேலும் பல முக்கிய தலைவர்களும் அரும்பாடுபட்டு நமது யாதவ குல வள்ளல்களிடம் நிதி வசூல் செய்து பிரம்மாண்டமாக 30 அடி உயர திருத்தேர் செய்து 2/6/2004 அன்று கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் தேர் பவனி விழாவை நமது யாதவ முன்னேற்ற சங்கம் நடத்தி வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் தேர் திருவிழாவை நமது யாதவ முன்னேற்ற சங்க உபயமாக நடைபெற்று வருகிறது.
ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள திரொபதி அம்மன் கோவில் ஆடி மாத உற்சவம் சாமி வீதி உலா யாதவ முன்னேற்ற சங்கத்தின் சார்பாக சிறப்பாக செய்து வருகிறோம்.
வாழை குளம் செங்கேணி அம்மன் கோவில் ஆடி மாத உற்சவம் யாதவ முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது மற்றும் தொடர்ச்சியாக பதிமூன்று ஆண்டுகள் சிறப்பாகசெயல்பட்டது.
29/3/2009 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் K.செல்லப்பெருமாள் யாதவ் தலைவராகவும் P.ரங்கநாதன் யாதவ் செயலாளராகவும் R.சந்திரசேகரன் யாதவ் பொருளாலராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
முன்பு இருந்த நிர்வாகிகள் ஆரம்பித்துவைத்த செயல்பாடுகள் அனைத்தையும் தொய்வில்லாமல் சிறப்பாக நடத்திக் காட்டினார்கள்.
நான்காண்டுகள் நடைபெற்ற நிர்வாகத்தில்அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது.
28/4/2013அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் P.ரங்கநாதன் தலைவராகவும், M. கோபாலகிருஷ்ணன் செயலாளராகவும், VMS .ரவி யாதவ் பொருளாலராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
சங்கத்தின் முந்தைய நலத்திட்டங்கள் ஆன்மீக செயல்பாடுகள் எதுவும் தொய்வில்லாமல் மேலும் சிறப்பாக நடைபெற்றது.
தலைவர் P. ரங்கநாதன் யாதவ் அவர்கள் திடீரென்று இறைவனடி சேர்ந்ததால் 2/8/2020ல்மறைந்த தலைவருக்கு மலரஞ்சலி செலுத்தி நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை தற்காலிகத் தலைவராக பேராவூர் பொன் மூர்த்தி யாதவ் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பு தலைவராக செயல்பட்டார்.
14/2/2021ல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் V M S .ரவி யாதவ் தலைவராகவும் பேராவூர் பொன் மூர்த்தி யாதவ் செயலாளராகவும் I.ராஜா என்கிற வரதராசு பொருளாலராகவும் மற்றும் நிர்வாக குழு செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
புதிய நிர்வாக குழு செயற்குழு கமிட்டி முன்னோர்கள் ஆரம்பித்து வைத்த திட்டங்களை தொய்வின்றி நடத்துவது என்றும் சில நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
40 ஆண்டு காலமாக ஆயுள் சந்தா உறுப்பினராக சேர்ந்தவர்களில் சிலர் மரணம் அடைந்தும் பலர் விலாசம் மாறியும் அவர்களிடம் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் இல்லாத நிலையில் ஆயுள் சந்தா உறுப்பினர்களை புதுப்பிப்பது என்றும் அவர்களது புதிய விலாசத்தை பதிவு செய்து அவர்களின் தொலைபேசி எண்ணை வாட் சப்பில் பதிவு செய்து சங்கத்தின் நிகழ்வுகளை அவ்வப்போது தெரியப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது ஆயுள் சந்தா உறுப்பினர்கள் அனைவருக்கும் I.D.கார்டு வழங்கி வருகிறோம் ஆயுள் சந்தா உறுப்பினர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.
நிர்வாகக்குழு செயற்குழு கூட்டத்தில் யாதவ முன்னேற்ற சங்கத்தில் புதிதாக ஆயுள் உறுப்பினராக சேர சந்தா தொகை ரூபாய் 3,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 500 என்றும் முடிவு செய்யப்பட்டது.
யாதவ முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினராக சேர சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.
மறைந்தஆயுள் உறுப்பினர்களின் பிள்ளைகள் ஆயுள் உறுப்பினராக சேரகுறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 1500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சங்கம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு தலைவரும் பதவியேற்கும் போது அவர்களது சொந்த செலவில் சங்க அலுவலக வாடகை செலுத்தி வருகிறார்கள் அந்த நிலை இன்றும் தொடர்கிறது.
எதிர்காலத்தில் சங்கத்துக்கு என்று ஒரு சொந்த இடம் வாங்க வேண்டும் என்ற 40 ஆண்டுகால யாதவ நல விரும்பிகளின் கனவுகளை நிறைவேற்ற முழு முயற்சி எடுக்கப்படும்.
நமது யாதவ குலமக்களின் எதிர்பார்ப்பைபூர்த்தி செய்யும் விதமாக திருமண தகவல்தொடர்புகளை நவீனமயமாகி கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்கு பெரும் தொகை செலவு செய்யப்பட்டுள்ளது 1/11/2021முதல் நடைமுறைக்கு வரும்.
நமது திருமண தகவல் தொடர்புகள் யாதவர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் யாதவ சொந்தங்கள் அனைவரும் நமது சங்க அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து திருமண தகவல்களை பதிவு செய்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.
நான்காண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலண்டர் இந்த வருடம் சேவை மனம் கொண்ட விளம்பரதாரர்களின் ஆதரவோடு தயாராகி உள்ளது அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் மீதம் உள்ள காலண்டர் ஏனைய யாதவ சொந்தங்களுக்கு வழங்கப்படும்.
இவை அனைத்துமே கொடை உள்ளம் கொண்ட நம் இனத்தின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் சேவை மனம் கொண்ட யாதவர்கள் வழங்கிய நிதியில் இருந்து தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் நமது சங்கத்தின் பொருளாதாரத்தையும் வளர்ச்சி அடைய செய்வது நமது கடமையாகும்.
பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள சங்கங்கள் தான் மக்கள் சேவைகளை சிறப்பாக செய்யமுடியும் என்பதை அறிவோம்
சேவை மனப்பான்மையோடு அனைவரும் ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம்
வாழ்க யாதவ குலம்
வெல்க யாதவர் சேவை
நன்றி வணக்கம்
தொடர்புக்கு
தலைவர் 9443224048
செயலாளர் 9486907915
பொருளாலர் 9486748565
Exclusively for Yadhavas
We are commited to provide the best matchmaking service exclusively for Yadhavas in Puducherry. The site is solely managed by Yadhava Munnetra Sangam Puducherry and started with the vision to provide a customer friendly and highly authentic platform for all potential users.
